அஃப்ரிடியின் மகளை மணந்த அஃப்ரிடி!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடிக்கும், அணியின் முன்னாள் வீரர் ஷாகின் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் கடந்த ஆண்டே நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் அண்மையில் திருமண வேலைகளை தொடங்கினர்.

இந்நிலையில் கராச்சியில் இன்று ஷாகின் ஷா அப்ரிடி – அன்ஷா அப்ரிடி திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்ஷா, ஷாகின் அப்ரிடியின் இரண்டாவது மகள். திருமணத்திற்கு பாபர் அசாம், நசீம் ஷா, ஷபாப் கான் உள்ளிட்ட தற்போதைய கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் வந்திருந்தனர்.

அன்ஷா அப்ரிடி மருத்துவம் படித்து வருகிறார். முன்னதாக நேர்காணல் ஒன்றில் திருணம் குறித்து ஷகீன்ஷா அப்ரிடி பேசியிருந்தார். அதில் அன்ஷாவை திருமணம் செய்து கொள்ள தாம் விரும்பியதாகவும், பெற்றோர் கேட்டபோது, அப்ரிடி ஒப்புக் கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார்.

மணமக்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.