அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் உக்ரைன் போர் தொடர்பாக ரகசிய சமாதான திட்டத்துடன் ரஷ்யாவிற்கு சென்றதாக வெளியான செய்தியை ரஷ்யா நிராகரித்துள்ளது.
உக்ரைன் அதன் 5-ல் ஒரு பகுதியை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்கும் என்று ரஷ்யாவிடம் வில்லியம் பர்ன்ஸ் கூறியதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பர்ன்ஸ் ரஷ்யாவிற்கு பயணம் செய்தாரா, சமாதான திட்டத்தை முன்வைத்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பத்திரிகையின் முழு செய்தியும் புரளி என தெரிவித்தார்.