இடைத்தேர்தல்: “சுமார் 50,000 வாக்காளர்கள் தொகுதியிலேயே இல்லை" – தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இல்லை சின்னம், தன்னுடைய கையொப்ப அதிகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்தது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், இந்த இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக டெல்லி தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் மனு அளித்திருக்கிறார்.

சி.வி.சண்முகம்

அதன்பின்னர் புகார் மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “மிகப்பெரிய முறைகேடுகள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இருக்கின்ற வாக்காளர் பட்டியலில் நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியிலேயே இல்லை. கிட்டத்தட்ட 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வாக்காளர்கள் தொகுதியில் தற்போது இல்லை.

ஒவ்வொரு பூத்களிலும் 15-லிருந்து 30 வாக்காளர்கள் வரை இறந்திருக்கிறார்கள். இறந்த வாக்காளர்கள் நீக்கப்படவில்லை அப்படிக் கணக்கெடுக்கப்பட்டால் 5000 வாக்குகளுக்கு மேல் இறந்த வாக்காளர்கள். இவர்கள் இந்த வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் விலாசம் கொடுக்கப்பட்ட இடத்தில் வாக்காளர்கள் குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இருக்கிறது, விலாசம் இருக்கிறது. ஆனால், கள ஆய்வில் அந்த விலாசத்தில் குடியிருப்பே இல்லை. வாக்காளர் பெயர் இரண்டு இடங்களில் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

வாக்கு

திட்டமிட்டு, நடைபெற இருக்கிற எதிர்கால தேர்தலை முன்னிட்டு ஆளுகின்ற தி.மு.க சொல்கின்ற செயல்களைச் செய்கின்ற அதிகாரிகளாக இன்றைக்கு தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேர்மையாக இந்த தேர்தல் நடைபெறாது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தேர்தல் நடந்தால் அது ஒரு நியாயமான தேர்தலாக இருக்காது என்பதால் இன்றைக்கு தேர்தல் ஆணையத்திடம் இந்த புகார் மனுவை அளித்திருக்கிறேன்.

இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்த தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து நேர்மையான சுதந்திரமான தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் இந்த வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரிபார்க்கப்பட வேண்டும். தொகுதியில் இல்லாத வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். காவல் துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தி.மு.க-வின் காவல்துறையை நம்ப முடியாது, நம்பி தேர்தலை எதிர்கொள்ள முடியாது.

இந்திய தேர்தல் ஆணையம்

ஆகவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை முழுக்க முழுக்க மத்திய காவல் படையினுடைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆகவே நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் உடனடியாக இந்த வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும். தொகுதியில் இல்லாதவர்கள் பெயரை நீக்கவேண்டும். இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். இரண்டு பெயர் இருக்கின்ற இடத்தில் வாக்காளர் பெயர் நீக்கப்பட வேண்டும். இதையெல்லாம் சரி பார்த்து முறையாக வாக்காளர் பட்டியலைத் திருத்தி வெளியிட்டு முறையாகத் தேர்தலை நடத்த வேண்டும்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.