கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
சீனா வழங்கிய கடன்
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை போராடி வரும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படுவதாக சீன அரசாங்கம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் துறைமுகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதன் மூலம் வர்த்தகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீனா, அதன் பல பில்லியன் டொலர் பெல்ட் மற்றும் ரோடு முன்முயற்சி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கடன் வழங்கியது.
HT
சீனா வழங்கிய கடன்களை இலங்கை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் ஏனைய திட்டங்களுக்கு நிதியில்லாமல் பயன்படுத்தியுள்ளது.
கடனைக் குறைக்க சீனா மறுப்பு
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் அவசரக் கடன் வழங்கியது, அதே சமயம், கடன் கொடுத்த மற்ற நாடுகளும் இலங்கை செலுத்த வேண்டிய தொகையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
ஆனால் மற்ற கடன் வாங்குபவர்கள் இதே போன்ற நிவாரணங்களைக் கோருவார்கள் என்று பயந்ததால் சீனா அதனை எதிர்த்தது. மாறாக, இப்போது 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது.
இந்தியாவின் உதவி
பிணை எடுப்புத் திட்டத்தை எளிதாக்க IMFக்கு உத்தரவாதம் அளித்ததாக கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. மேலும், இலங்கைக்கு அவசர கடனாக 4.4 பில்லியன் டாலர்களை இந்தியா வழங்கியது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
கடந்த ஆண்டு ஏப்ரலில், இலங்கையின் வெளிநாட்டு நாணயம் தீர்ந்துவிட்டது, இது மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை மற்றும் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேற்றி பாரிய போராட்டங்கள் வெடித்தது.
ஜப்பான், சீனா மற்றும் பிற வெளிநாட்டு கடன் வழங்குபவர்களுக்கான கடனை திருப்பிச் செலுத்துவதும் நிறுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கம் தற்போது செலவினங்களைக் குறைத்து வருவதுடன், 2030-ஆம் ஆண்டளவில் 200,000 உறுப்பினர்களைக் கொண்ட இராணுவத்தை கிட்டத்தட்ட பாதியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.