ஈரோடு இடைத்தேர்தல்: வினோத முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ராஜேந்திரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
வேட்பாளார்கள் தாங்கள் தங்கள் தொகுதியில் வெற்றிப்பெற பல வழிகளில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ராஜேந்திரன் என்பவர், இம்முறை, ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட, ₹10 நாணயங்களை டெப்பாசிட் தொகையாக கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
image
இந்நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், தினசரி அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்து நடத்துநர்கள் வசூல் செய்து கொண்டு வரும் பேருந்துக் கட்டணத்தில் பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்க மறுப்பதாகவும், அதனால் அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனைகளில் 10 ரூபாய் நாணயங்கள் தேங்கிக் கிடப்பதாகவும், அந்த நாணயம் செல்லும் என்பதை நாடறியச் செய்ய, தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.
அதற்காக, இடைத்தேர்தல் டெபாசிட் தொகை 10 ஆயிரம் ரூபாயையும், பத்து ரூபாய் நாணயங்களாக செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்காக அவர் கையில் வைத்த ₹10 நாணயங்களை செய்தியாளர்கள் முன்பு மேசையில் காட்சிப்படுத்தியதுடன், தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும், நல்ல மனிதர்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறினார். 
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டவர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.