கடத்தல்; வன்கொடுமை; அடிமை… சமூக வலைதளம் மூலம் `பெண்கள் டார்கெட்’ – யார் இந்த டட்டே சகோதரர்கள்?!

பிரிட்டிஷ் – அமெரிக்கரான ஆண்ட்ரீவ் டட்டே நன்கு அறியப்பட்ட டிக்-டாக் பிரபலமாக இருந்துவந்துள்ளார். 36 வயதான இவர் கடந்த 2022 -ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் 8 -ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக இவர்மீது பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் , இவரும் இவரின் 34 வயது தம்பியும் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தனர்.

இவர், அதிக ரசிகர்களை ஈர்க்கவும், அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் கார்களை வேகமாக ஓட்டுவது , இளம்பெண்களுடன் பழகுவது, பெண்களை எப்படி காதலிக்க வைப்பது என்பது போன்று பதிவுகளை உருவாக்கியுள்ளார். அதோடு தனது ரசிகர்கள் பலரின் கணக்குகளையும் இவரே கையாண்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல முகநூல் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பெண்களை பற்றி வெறுக்கத்தக்கதான பதிவுகளை பகிர்ந்துள்ளார். பாலியல் சார்ந்த இவரின் பதிவுகளால் இவரின் கணக்கை டிக்- டாக் முடக்கியுள்ளது.

அதுபோல மெட்டா நிறுவனமும் இவரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியுள்ளது. மேலும் 2021-ல் ஒரு பாட்காஸ்டில், பிரிட்டனில் வெப்கேம் வணிகத்தைத் தொடங்கியதாகவும் , அதில் 75 பெண்கள் மாதம் $600,000 சம்பாதிப்பதன் மூலம் உச்சத்தை எட்டியுள்ளதாகவும் கூறியிருந்தார் . ஆனால் என்ன வேலை என்பதை அவர் குறிப்பிடவில்லை.

கடந்த மாதம் வரை, அவரின் இணையதளம் $400க்கும் அதிகமான செலவில் ஒரு கோர்ஸை(Course) வழங்கியது, அது உங்களுக்கு அடிபணிந்த, விசுவாசமான மற்றும் அன்பான ஒரு பெண்ணை உருவாக்குவதற்கான ஒவ்வொரு அடியையும் கற்பிப்பதாக’ உறுதியளித்தது. அதுமட்டுமல்லாமல், மிகவும் திறமையாக `பெண்களை என்னை காதலிக்க வைப்பது என் திறமை,” என்று அவர் இணையதளத்தில் கூறினார்.

இந்நிலையில் இவர் மீது பெண்களை கடத்துவது, பாலியல் உறவு வைத்து கொள்வது மற்றும் அவர்களை அடிமையாக்கிக்கொள்வது என புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து பெண் ஒருவர் வாய்திறந்து நிலையில் டட்டே சகோதரர்கள் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளனர்.

டட்டேவுக்கு அந்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். பழக்கம் ஏற்பட்டு விட லண்டனில் ஒருமுறையும் , ரோமானியாவில் ஒருமுறையும் நேரில் சந்தித்துள்ளனர். டட்டே அந்த பெண்ணிடம் கூறுகையில், “ஒருமுறை நீ என்னுடையவளாக இருந்தால், என்றென்றும் என்னுடையவளாக இருப்பாய் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஆசைவார்த்தை பேசியுள்ளார் .

ஒருக்கட்டத்தில் அந்த பெண் அவரும் தன்னை விரும்புவதாக நம்பியுள்ளார். அதோடு அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக அந்த பெண் கூறுகிறார். பின்னர் டட்டே அந்த பெண்ணை கடத்தி , அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவரோடு சேர்த்து ஆறு பெண்கள் டட்டேயின் வலையில் சிக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அதில் 2 பெண்கள் டட்டே மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். “நான் அந்த பட்டியலில் ஒருவராக இல்லாதபோது நீங்கள் என்னை பாதிக்கப்பட்டவர் என்று பட்டியலிட முடியாது” என்றிருந்தார். ஆனால் மற்ற 4 பெண்களும் மெளனமாக இருந்துள்ளனர். எனினும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களின் நகல்கள் மற்றும் ஆதாரங்களின் படி இந்த குற்றங்களுக்கு துணைபோன 2 பெண்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வருகிற ஜூன் மாதம் வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.