கேரளா மாநிலம், திருவனந்தபுரம் உம்மலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சஹத்- ஜியா என்ற மூன்றாம் பாலின தம்பதி. இவர்கள் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படுகிண்டபிரானார். இதில் சஹத் பெண்ணாக பிறந்து பிறகு ஆணாக மாறினார். ஜியா ஆணாக பிறந்து பெண்ணாக மாறினார். சஹத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், ஜியா நடன கலைஞராக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.
இந்த தம்பதி தற்போது இன்னும் சில மாதங்களில் தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். இதன் மூலம் குழந்தையை பெற்று எடுக்கும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தவர் தம்பதி என்ற பெருமையை வகிக்க உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு மற்ற தம்பதிகள் போல தங்களுக்கும் ஒரு குழந்தை வேண்டும், குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இந்த தம்பதிக்கு இருந்து உள்ளது. ஆனால் இது நடைமுறையில் பல சிக்கல்களை கொண்டது என உணர்ந்த இந்த தம்பதி, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என நினைத்து உள்ளனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களாக இருப்பதால் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு இடையில் சஹத் ஆணாக மாறி இருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும், குழந்தை பெற்றெடுக்க முடியும் என்ற செய்தியை இவர்கள் அறிந்துள்ளனர். பிறகு, நீண்ட யோசனைக்கு பிறகு தாங்கள் பெற்றோர் ஆகலாம் என்ற முடிவை இந்த தம்பதி எடுத்துள்ளனர். ஆனால் ஊர் என்ன சொல்லும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தயக்கத்தில் இந்த முடிவை எடுக்க யோசித்து உள்ளனர்.
ஆனாலும், தங்களுக்கு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தால், இந்த முடிவை எடுக்க தயாராகி உள்ளனர். இதனை அடுத்து சஹத் மற்றும் ஜியா தம்பதி கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்து உள்ளனர். சஹத்திற்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி உள்ளனர்.
சஹத் மற்றும் ஜியா தம்பதி தாங்கள் கருவுருவதற்காக சிகிச்சையை தொடங்கி உள்ளனர். இவர்கள் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கின்றனர். இந்நிலையில், இவர்களின் பிரசவம் வருகின்ற மார்ச் மாதம் ல் வாரத்தில் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
தற்போது சஹத்- ஜியா தம்பதி தங்களது கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளனர். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். குழந்தைக்காக தாங்கள் ஆவலாக காத்து இருப்பதாகவும், குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் தானம் வழங்கும் வங்கியில் இருந்து பாலை பெற்று குழந்தைக்கு தர உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.