இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.
2023 பெப்ரவரி 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023பெப்ரவரி 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு,வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.