வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கும் அரசியல் சாசனத்தின் 13 ஏ பிரிவை செயல்படுத்த, புத்த மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ௧௯௮௭ல் இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ள ௧௩ ஏ சட்டப் பிரிவை முழுமையாக நடைமுறைபடுத்த, நம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இலங்கை பார்லிமென்ட் கூட்டத் தொடர், பிப்., ௮ம் தேதி துவங்க உள்ளது. இதில், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் அறிவிப்பை வெளியிட அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டிருந்தார். இது குறித்து அவர் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், புத்த மதத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சில தலைவர்கள் விக்ரமசிங்கேவை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். இதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவை அமல்படுத்தினால், நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும். இது நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும்.
இத்தனை ஆண்டுகளாக எந்த அதிபரும் இதை செயல்படுத்த முன்வராததற்கு இதுவே காரணம். நம் நாட்டின் நலனுக்கு எதிரான அந்த சட்டப் பிரிவை அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம், 2.2 கோடி மக்கள்தொகை உள்ள இலங்கையில், சிங்களத்தவர், ௭௫ சதவீதம் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் தமிழர்கள், 15 சதவீதம் பேர் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement