தளபதி 67 படத்தின் பெயர் இதுவா? வைரலாகும் மூன்றெழுத்து பெயர்!

தளபதி 67 படத்தின் பெயர் இன்று மாலை 5 மணியளவில் தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும் டைரக்டர் லோகேஷ் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்டை வைத்து இதுதான் படத்தின் பெயராக இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 67. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். கொடைக்கானலில் நடைபெற்ற படபிடிப்பிற்கு பிறகு, தற்போது தளபதி 67 படக்குழு காஷ்மீரில் அடுத்தகட்ட படபிடிப்பை நடத்தி வருகிறது.

image

இந்த நிலையில், பிப்ரவரி 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து தளபதி 67 குறித்த அப்டேட்கள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட நிகழ்ச்சியின் போது முன்னர் கூறியிருந்தநிலையில், அதன்படி தொடர்ச்சியாக தளபதி 67 பற்றிய அப்டேட்களை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டு வந்தது. அதில் முதல் அப்டேட்டாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது.

அதற்கடுத்தபடியாக படத்தின் பூஜை குறித்த போட்டோவையும், அதன் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியது படக்குழு. அதில் விஜய், லோகேஷ், த்ரிஷா, அர்ஜூன், ப்ரியா ஆனந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் பங்கேறிருந்திருந்தார்கள். தளபதி 67 பூஜை வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இணைந்தது.

image

இந்நிலையில் அடுத்த அப்டேட் எங்கே என தொடர்ந்து ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் மீதான நம்பிக்கையில் அதிக எதிர்ப்பார்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில், தளபதி 67 படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் டைரக்டர் லோகேஷ் மட்டுமின்றி, இசையமைப்பாளர் அனுருத் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் அடுத்தடுத்து டிவிட்டரில் தங்களுடைய பதிவை பதிவிட்டனர்.

7ஸ்கிரீன் பதிவால் இதுதான் பெயராக இருக்கும் என பதிவிட்டு வரும் ரசிகர்கள்!

தயாரிப்பு நிறுவனமான 7ஸ்கிரீன் ஸ்டுடியோ, தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் நாளை 5 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், நாங்க சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவோம் என கூறி தளபதி 67 டைட்டில் 67% லோடிங் என பத்து கட்டங்களை ஃபில் செய்துவிட்டு, கடைசி 3 கட்டங்களை எம்டியாக விட்டு பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு தான் அந்த 3 கட்டங்களையும் ஃபிரியாக விட்டிருக்கின்றனர்.”அப்படியானால் படத்தின் பெயர் மூன்றெழுத்தில் தான் இருக்க வாய்ப்பிருக்கிறது” என ரசிகர்கள் பலர் மூன்றெழுத்தில் தான் படப்பெயர் இருக்கும் என வைரலாக்கி வருகின்றனர்.

என்ன அந்த 3எழுத்து பெயர்?

இந்த 3எழுத்து கதை வைரலாவதற்கு முன்னதாகவே, படத்தின் பெயர் “குருதிபுனல்” என்ற தகவல் வைரலாக பரப்பப்பட்டு வந்தது. ரத்தத்தால் வரையப்பட்ட விஜய் படத்தை தயாரிப்பு நிறுவனம் மற்றும் டைரக்டர் லோகேஷ் என இரு தரப்பும் பதிவிட்டதால், நிச்சயம் படத்தின் பெயர் குருதிப்புனலாக தான் இருக்கும் என்று வைரலாக பரவியது.

image

இந்நிலையில் படத்தின் பெயர் 3 எழுத்தில் தான் இருக்கும் என்ற தகவல் வைரலானதால், அப்போ படத்தின் பெயர் “குருதி” என தான் இருக்குமென வைரலாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும் இல்லை அந்த 3 கட்டங்கள் LCUவை தான் குறிக்கின்றன என்றும் கருத்திட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

முன்னதாக டிவிட்டர் வலைதளத்தில் #Thalapathy67 , #Thalapathy67Cast போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்துவந்த நிலையில், தற்போது #Thalapathy67TitleReveal என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.