’நோ’ சொன்ன எடப்பாடி; பாஜக ஆட்டம் குளோஸ்- ஓபிஎஸ் டீம் வேற பிளான்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் பிரிந்து நிற்கும்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
ஆகிய இருவரையும் ஒன்று சேர்க்க பாஜக முயற்சிக்கிறது. இதையொட்டியே டெல்லி சென்று விட்டு சென்னை திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார். பாஜகவின் கணக்கு என்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அல்ல. வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தல். இதற்கு அச்சாரம் போடத் தான் அதிமுக இணைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

பாஜக முயற்சி

மக்களவை தேர்தலில் அதிமுக குறிப்பிட்ட இடங்களை பெறுவதற்கு கூட ஒன்றுபட்ட கட்சியாக மக்கள் முன்பு காட்ட வேண்டும். அதற்கு பிரிந்து சென்றவர்கள் கூட கூட்டணியாக கைகோர்த்து நிற்க வேண்டியது அவசியம். இப்படியான சூழலில் பாஜகவின் முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் பொன்னையன் பேட்டியை பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமி பழைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தோன்றுகிறது.

எடப்பாடியின் பதில்

அதாவது ஓபிஎஸ் உடன் கைகோர்க்க தயாராக இல்லை. முடியாது என்று பாஜகவிடம் சொல்லியிருக்கலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக விட்டுக் கொடுத்து போனால் எதிர்காலத்தில் இதுபோல விட்டுக் கொடுத்து கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் வரும். எனவே ஒன்றுபட்ட அதிமுகவிற்கு ’நோ’ என்ற நிலைப்பாட்டிற்கு எடப்பாடி வந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் பாஜக ஒதுங்கி கொள்ளும்.

அடுத்தடுத்து தேர்தல்

அப்படி நடந்தால் தனக்கு நன்மை என்று தான் எடப்பாடி கருதுவார். ஏனெனில் விட்டு போன சிறுபான்மையினர் வாங்கு வங்கி மீண்டும் வந்து பலம் சேர்க்கும். அடுத்து வரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவின் பலத்தை காட்ட வாய்ப்பாக அமையும் என்று கூட நினைக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் பெரிய சிக்கல் ஏற்படும்.

இரட்டை இலை சின்னம்

அது எட்டாக் கனியாக இழுபறியாக தொடரும் என்பது கவனிக்க வேண்டியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கத்திற்கு தான் காரணம் இல்லை என்பதை திரும்ப திரும்ப நினைவுபடுத்தி வருகிறார். எடப்பாடி உடன் கைகோர்த்து செல்ல தயார். இறங்கி எவ்வளவோ தயாராக இருந்தேன்.

ஓபிஎஸ் திட்டம்

இரட்டை இலை சின்னத்திற்காக ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்தும் போட தயாராக இருந்தேன் என்றெல்லாம் கூறி தொண்டர்களின் அனுதாபத்தை சம்பாதிக்க பார்க்கிறார். இதற்கெல்லாம் எடப்பாடி தான் காரணம் என்பதை சுட்டி காட்டியும் வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் பேச்சை கேட்டு நடப்பதற்கே ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதை பார்க்க முடிகிறது.

வேறுவிதமான கணக்கு

ஏனெனில் அக்கட்சி வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கி கொள்வேன். பாஜகவிற்கு ஆதரவு அளிப்பேன் என்றெல்லாம் கூறியுள்ளார். எடப்பாடி கைகோர்க்க முன்வரவில்லை எனினும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இரட்டை இலை முடங்கி விடும். அடுத்தகட்டமாக அதிமுகவை கைப்பற்ற பாஜக உடன் சேர்ந்து வேறு விதமான கணக்குகளை போடக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.