பதற்றத்தில் இருந்த முதலீட்டாளர்கள்.. அதானி எடுத்த அந்த முடிவால் என்னவெல்லாம் ஆகப்போகிறது?

அதானி பற்றிய செய்திகள்தான் தற்போது அனைத்து ஊடகங்களிலும் முதன்மையானதாக இருக்கிறது. அதன்படி, தற்போதைய செய்தியாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அதன் ரூ.20,000 கோடி ஃபாலோ-ஆன் பொதுச் சலுகையை (FPO) ரத்து செய்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி வழங்குவதாகக் கூறியுள்ளது.
அதானி குழுமத்தின் FPO விற்பனை
அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பொதுப் பங்குகளை ரூ.20ஆயிரம் கோடிக்கு வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்தது. இதன்படி கடந்த மாதம் கடைசி 3 நாட்கள் FPO விற்பனை நடந்தது. நிறுவனம் ஒன்று, பங்குச் சந்தையில் அறிமுகமான பின்பு நிதியை திரட்டுவதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி சந்தைக்குள் கொண்டுவரும் நடைமுறையே FPO ஆகும். கடனைத் திரும்பச் செலுத்த அல்லது பங்குகளைப் பொதுவான பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிறுவனங்கள் FPO அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.
image
1.28 கோடி பங்குகள் விற்பனை
அந்த வகையில், அதானி குழுமம் தனக்கு இருக்கும் கடன் தொகையை குறைப்பதற்காக இந்த FPOவை அறிவித்திருந்தது. இதையடுத்து, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் 4.62 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் 4.55 கோடி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. நிறுவனமில்லாத முதலீட்டாளர்கள், இந்திய முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு அதிக அதிகாக 96.16 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர். 1.28 கோடி பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீ்ட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டநிலையி்ல் அனைத்தும் விற்பனையானது என்று பங்குசந்தையில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமம் விளக்கம்
இந்த நிலையில் திடீரென அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் FPO அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களிடம் பணத்தை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதானி நிறுவனம் தரப்பு வெளியிட்ட விளக்கக் கடிதத்தில், “பங்குச்சந்தையில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஏற்ற இறக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, FPOவைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டாம் என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் எங்களுடைய எந்த எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து நாங்கள் செயல்பட்டு, திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்போம். அதானி குழுமத்தின் அடித்தளம் வலுவாக இருக்கிறது. நீண்டகால மதிப்பை உருவாக்கும் அம்சங்களில் கவனம் செலுத்துவோம். சந்தையில் நிலைத்தன்மை வந்தபின், மூலதனச் சந்தைத் திட்டத்தை வகுப்போம்” எனத் தெரிவித்துள்ளது.
image
ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கை
முன்னதாக ஹிண்டன்பர்க், கடந்த 24ஆம் தேதி அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்தது.
அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதிலும், சீன நாட்டைச் சேர்ந்த சாங் சங் – லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும் என்ன சம்பந்தம் என தாம் கேட்டதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்திருந்ததுடன், அதற்கு விளக்கம் அளித்திருந்ததுதான் அவர்கள் இடையே மீண்டும் புயலைக் கிளப்பியிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், ’ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது.
image
பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற்றம்
மேலும், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. அதில் `வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’ எனவும் `மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம்’ எனவும் அது தெரிவித்திருந்தது. ஹிண்டன்பர்க்கின் அடுத்தடுத்த அறிக்கைகளால், அதானி குழும பங்குகள் மோசமான சரிவை சந்தித்ததுடன், பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.