பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி


பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரிக்கும் சமையல் கலைஞராக பணியாற்றும் ஒருவரை சர்வதேச பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது

பிரான்ஸ் நாட்டிலுள்ள இத்தாலிய உணவகங்களில் பீட்சா தயாரிக்கும் சமையல் கலைஞராக பணியாற்றிவந்தவர் Edgardo Greco (63).

ஒரு கட்டத்தில் சொந்தமாக ஒரு இத்தாலிய உணவகத்தையே நடத்திவந்துள்ளார் அவர்.

அவர் தற்போது சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி | A Thrilling Background Revealed

அதிரவைக்கும் பின்னணி

உண்மையில் இந்த Edgardo, இத்தாலியில் Ndrangheta என்னும் ஒரு பயங்கர மாபியா கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது.

பயங்கர குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்படும் இந்த Edgardo, 1991ஆம் ஆண்டு Bartolomeo சகோதரர்கள் என்னும் இரண்டு சகோதரர்களை இரும்புக் கம்பியால் அடித்தே கொன்றுள்ளார்.

அவர்களுடைய உடல்கள் கிடைக்காத நிலையில், அவை அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அத்துடன், மாபியா குழுக்களுக்கிடையிலான மோதலில், மற்றொருவரை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆக, கொலை செய்துவிட்டு தப்பி பிரான்சுக்கு வந்து, 16 ஆண்டுகள் உணவகங்களில் பீட்சா தயாரிப்பவராக பணியாற்றிவந்துள்ளார் Edgardo.

தான் ஒரு காலத்தில் இத்தாலிய உணவகம் ஒன்றை நடத்திவந்த Saint-Etienne என்னும் பிரெஞ்சு நகரத்திலேயே நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், Lyon நகர மாஜிஸ்திரேட் ஒருவர் முன் ஆஜர் செய்யப்பட்டு, பின் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.