#BREAKING வெளியானது தளபதி 67 படத்தின் பெயர்!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜயின் அடுத்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படம் வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்திருந்தனர். அதனால் படக்குழு ஜனவரி 31ஆம் தேதியில் இருந்து அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.

முதலில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி, கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உள்ளனர். அதே போல் த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் உடன் ஜோடி சேர உள்ளார்.

அதைத் தொடர்ந்து படத்தின் பூஜை வீடியோ வெளியானது. பின்னர் படக்குழு ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் செல்லும் தகவல் வெளியானது. இன்று மதியம் படக்குழு விமானத்தில் செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது படத்தின் பெயரை படக்குழுவினர் வீடியோ உடன் வெளியிட்டுள்ளனர். தளபதி 67 படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.