K Viswanath death:'யாரடி நீ மோகினி' ஸ்ட்ரிக்ட் தாத்தா… கே விஸ்வநாத் இயக்கி ஹிட் படங்கள்!

பிரபல இயக்குநரும் நடிகருமான கே விஸ்வநாத்தின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிர் அவர் இயக்கிய படங்களின் பட்டியல் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநர்இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். 92 வயதான கே விஸ்வநாத் வயது முதிர்வால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஹைதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
​ Thalapathy 67, Trisha:தளபதி 67 படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் த்ரிஷா… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!​
50க்கும் மேல்1965 ஆம் ஆத்ம கவுரவம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே விஸ்வநாத், தனது முதல் படத்திற்கே சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை பெற்றார். தாய் மொழியான தெலுங்கில் அதிக படங்களை இயக்கியுள்ள கே விஸ்வநாம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே விஸ்வநாத் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
​ Lokesh Kanagaraj, Magizh Thirumeni: மகிழ் திருமேனியை அட்ட காப்பியடித்த லோகேஷ்? வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!​
ஹிட் படங்கள்கே விஸ்வநாத் இயக்கிய செல்லேலி கபுரம், காலம் மாறிந்தி, சரடா, ஓசீதா காதா, ஜீவன ஜோதி, சங்கராபரணம், சப்டபடி, சுபலேகா, சாகர சங்கமம், ஸ்வாதி முத்தியம், ஸ்ருதிலயலு, ஸ்வர்ண கமலம், சுற்றுதருலு, ஆபந்தபந்தவுடு, சுப சங்கல்பம், ஸ்வர்பிஷேகம் ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது , தேசிய விருது மற்றும் பல வெளிநாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.
​ Nellai Thangaraj Passes away: ‘பரியேறும் பெருமாள்’ நடிகர் நெல்லை தங்கராஜ் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!​
தமிழ் படங்கள்பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. இதில் சாகர சங்கமம் திரைப்படம் சலங்கை ஒலி என்ற பெயரிலும் ஸ்வாதி முத்தியம் சிப்பிக்குள் முத்து என்ற பெயரிலும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு படங்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் நடித்திருந்தார். இந்த படங்கள் தமிழிலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.
​ மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!​
ஸ்ட்ரிக்ட் தாத்தாபிரபல இயக்குநரான கே விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, சிங்கம் 2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி படத்தில் நடிகை நயன்தாராவின் ஸ்ட்ரிக்ட் தாத்தாவாக நடித்திருந்தார் கே விஸ்வநாத். திரைத்துறையில் அவர் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ’விருதுகளை வழங்கியுள்ளது. மேலும் கே விஸ்வநாத் 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றுள்ளார்.
​ Actors Salary: தளபதி 67… தலை சுற்ற வைக்கும் விஜய்யின் சம்பளம்… அதளபாதளத்துக்கு போன ரஜினி… அஜித்?​
k-viswanath

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.