Thalapathy 67, Agent Tina: தாறுமாறு டிரெண்டில் ஏஜென்ட் டீனா: தளபதி 67 கதை தெரிஞ்சுடுச்சே

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் விக்ரம் படம் புகழ் ஏஜென்ட் டீனா நடிப்பது குறித்து தான் சமூக வலைதளத்தில் பேச்சாக உள்ளது.

தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதற்காக படக்குழு தனி விமானம் மூலம் காஷ்மீர் கிளம்பிச் சென்றது. இந்நிலையில் தான் படக்குழு கிளம்பியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏஜென்ட் டீனாவிமான நிலையத்தில் கேமராவுக்கு முன்பு வந்து ஆக்ஷன் செய்து காட்டிவிட்டுச் சென்றவர்களில் விக்ரம் படம் புகழ் ஏஜென்ட் டீனாவும் ஒருவர். டீனாவை பார்த்ததுமே ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். இது ஸ்டாண்ட் அலோன் கதை இல்லை. லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ. தான். அதனால் தான் ஏஜென்ட் டீனாவை நடிக்க வைக்கிறார் லோகேஷ் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
வீடியோ
டிரெண்ட்தளபதி 67 படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனால் #Thalapathy67TitleReveal என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே ஏஜென்ட் டீனாவை வீடியோவில் பார்த்தவர்கள் அது குறித்து அதிக அளவில் ட்வீட் செய்து வருகிறார்கள். அதனால் Agent Tina என்கிற ஹேஷ்டேகும் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
லோகேஷ்Thalapathy 67: தளபதி 67 பூஜைக்கு யார் வந்ததுனு பார்த்தீங்களா?: கதை கசிந்துவிட்டதே லோகிலோகேஷ் கனகராஜ் படத்தின் ஸ்பெஷாலிட்டியே இது தான். ஹீரோ மட்டும் அல்ல அவர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும் ரசிகர்கள் கவனித்துவிடுவார்கள். அதனால் தான் டீனாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். முன்னதாக தளபதி 67 பட பூஜையில் கைதி படம் புகழ் ஜார்ஜ் மரியான் கலந்து கொண்டார். தற்போது ஏஜென்ட் டீனா. அதனால் தளபதி 67 கதை எல்.சி.யூ. தான் என ரசிகர்கள் முடிவே செய்துவிட்டார்கள்.

கமல் ஹாசன்Thalapathy 67: தம்பி, இந்த சித்து விளையாட்டுலாம் என்கிட்ட வேணாம்: லோகேஷுக்கு விஜய் போட்ட உத்தரவுதளபதி 67 எல்.சி.யூ. கதை கொண்ட படம் என்றால் உலக நாயகன் கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா, ஃபஹத் ஃபாசில் ஆகியோரையும் விஜய் படத்தில் பார்க்கலாம். இதற்கிடையே தளபதி 67 படம் எல்.சி.யூ.வாக இருக்கக் கூடாது. இது எனக்காக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜிடம் விஜய் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் தளபதி 67 எல்.சி.யூ.வுக்குள் சென்றுவிட்டது போன்று தான் தெரிகிறது. அப்படி என்றால் படத்தில் வரும் அனைவரும் கண்டிப்பாக கவனிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.