Thalapathy 67, Varisu: ரூ. 300 கோடிப்பு: வாரிசு வசூலை முந்திய தளபதி 67?

Varisu Collection: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படம் வாரிசு வசூலை முந்திவிட்டது பற்றி பேசப்படுகிறது.

வாரிசுThalapathy Vijay: திடீர்னு வந்த மெசேஜ்: அப்படியே ஆடிப் போன விஜய் ரசிகர்கள்வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 11ம் தேதி ரிலீஸான வாரிசு படம் ரூ. 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் வாரிசு ரிலீஸாகவிருக்கிறது. வாரிசு பட வசூல் பற்றி ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே அது வாரிசு வசூலை முந்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தில் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிவிட்டது. இதையடுத்து சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் மட்டும் ரூ. 300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ரூ. 300 கோடிஅடேங்கப்பா தளபதி 67 படத்தின் வசூல் இப்போவே ரூ. 300 கோடி என்றால், படம் மட்டும் ரிலீஸானால் எத்தனை கோடி வரும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. அதில் த்ரிஷா கலந்து கொண்டுள்ளார். 14 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கத்து.

​Trisha, Thalapathy 67: 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்த த்ரிஷா: க்யூட் வீடியோ

விஜய்முன்னதாக தளபதி 67 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார்கள். அதில் த்ரிஷா ஏதோ சொல்ல விஜய் க்யூட்டாக சிரித்த புகைப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. தளபதி அந்த அளவுக்கு வெட்கப்பட்டு சிரிக்கும்படி த்ரிஷா என்ன தான் சொல்லியிருப்பார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ரகசியத்தை த்ரிஷா சொன்னால் தான் உண்டு என மேலும் தெரிவித்துள்ளனர்.
அப்டேட்இந்த வாரம் முழுவதும் தளபதி 67 பட அப்டேட் வரும் என்றார்கள். அதன்படி தினமும் அப்டேட் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தளபதி 67 படத்தின் தலைப்பு அடங்கிய ப்ரொமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இன்று சிம்புவின் பிறந்தநாள் ஆகும். அந்த நாளில் ப்ரொமோ வருவதால், தளபதி 67 படத்தில் சிம்பு நடிக்கிறாரோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சிம்புவிஜய்க்கு ஏற்கனவே ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த கூட்டத்தில் சிம்புவும் சேரப் போவதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான். இதற்கிடையே தளபதி 67 படத்தின் தலைப்பு எதுவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.