இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது.
சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் லிட்ரா கேஸ் என்ற பெயரில், இலங்கையின் 85 சதவீத கியாஸ் விநியோகத்தை தன்வசம் வைத்துள்ளது.
இந்நிலையில் பனிரெண்டரை கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை இலங்கையின் பணத்தில் மேலும் 334 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 743க்கு விற்பனை செய்கிறது.
இதேபோன்று, 5 கிலோ எடை கொண்ட கியாஸ் விலையை ஆயிரத்து 904 ரூபாயாகவும், இரண்டு கிலோ 300 கிராம் எடை கொண்ட கியாஸிற்கு 883 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்து விடும் என்றும் லிட்ரா அறிவித்துள்ளது.