கனடாவில் வீடு ஒன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2 பேரின் சடலம்
டர்ஹாம் பிராந்திய பொலிஸ் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.
சனிக்கிழமை மதியம் 2.15 மணிக்கு தகவலின் பேரில் பொலிசார் அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர்.
அப்போது இரண்டு ஆண்கள் சடலமாக கிடந்தனர், அவர்கள் ஏதோ அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டது போன்று தெரிந்தது.
இந்த மரணங்கள் 2023 இல் டர்ஹாம் பிராந்தியத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது கொலைகளாக பதிவாகியுள்ளது.
சாட்சிகள்
இரண்டு பேரின் சடலங்களை உடற்கூராய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குறித்த வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பில் எதாவது தகவல்களோ அல்லது வீடியோ காட்சிகளோ உள்ளவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.