கருப்பை நீக்கினால் மட்டுமே பெண்கள் இனி அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்: மருத்துவர்கள் ஆலோசனை


கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, பெண்கள் கருப்பை நீக்க வேண்டும் என தற்போது மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பை புற்றுநோய்

கருப்பை நீக்கம் அல்லது salpingectomy என்பது பொதுவாக நிரந்தர கருத்தடையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போது கருப்பை புற்றுநோய் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியானதில்,

பிள்ளைகள் இனி போதும் என்ற முடிவுக்கு வந்த தாய்மார்கள், கருப்பை நீக்கம் செய்து கொள்வது கருப்பை புற்றுநோய் என்ற ஆபத்தில் இருந்து தப்பிக்க காரணமாக அமையும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புற்றுநோய் சொசைட்டியின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 19,710 பெண்கள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் ஆண்டுதோறும் 13,000 பேர் இந்த நோயால் இறக்கின்றனர்.

கருப்பை நீக்கினால் மட்டுமே பெண்கள் இனி அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்: மருத்துவர்கள் ஆலோசனை | Ovarian Cancer Women Fallopian Tubes Removed

கருப்பை நீக்க சிகிச்சை

கருப்பை நீக்க சிகிச்சையானது மிக எளிதான முறையில் தற்போது மருத்துவர்கள் முன்னெடுக்கின்றனர்.
மட்டுமின்றி, சுமார் மூன்று வார காலத்தில் சிகிச்சைக்கு பின்னர் பெண்கள் சகஜ நிலைக்கும் திரும்புகின்றனர்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த சிகிச்சையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், தொற்று, அருகிலுள்ள உறுப்புகளுக்கு சேதம் மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

அமெரிக்க மக்களை பொறுத்தமட்டில் சுகாதார காப்பீட்டைப் பொறுத்து $4,000 முதல் $100,000 வரை செலவாகும் என கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.