சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த 20ஆம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 1949ஆம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை ஓடுக்க சீன அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.
சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் ஆதிக்கத்தை குறைக்க சீனாவின் ஹன் இன மக்கள் ஜின்ஜியாங் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி 48 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மறுகல்வி முகாம்கள் என்ற பெயரில் உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த இன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
இளைஞர்கள் பரிசோதனைக்கூட எலிகளைப் போன்று பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை வைத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசிகளும் போடப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான மசூதிகள் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தை பின்பற்ற தடை விதிக்கப்படுகிறது. முகாம்களில் முஸ்லிம்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சித்ரவதைகளை சீன அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜின்ஜியாங் பகுதி தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்து வருகிறது. இந்தநிலையில் சீனாவில் வசிக்கும் 10 ஆயிரம் உய்குர் முஸ்லீம்களை மீள் குடியேற்றம் செய்ய கனடா நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
உய்குர் முஸ்லீம்கள், சீனாவுக்குத் திரும்பும்படி சீன அரசின் அழுத்தத்தையும் மிரட்டலையும் எதிர்கொள்கிறார்கள். அங்கு அவர்கள் வெகுஜன தன்னிச்சையான தடுப்புக்காவல், குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வெகுஜன தன்னிச்சையாகப் பிரித்தல், கட்டாய கருத்தடை, கட்டாய உழைப்பு, சித்திரவதை மற்றும் பிற அட்டூழியங்களுக்கு ஆளாகிறார்கள் என கனடா தெரிவித்துள்ளது.
முருகனைப் பார்க்க படையெடுத்த பக்தர்கள்! !
சீன இனப்படுகொலை மூலம் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர்களை நடத்துவதைக் குறிக்கும் கூடுதல் நடவடிக்கையாக, கனேடிய பாராளுமன்றம் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. இது 2024 இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் உய்குர் அகதிகளை மீள்குடியேற்றத்தை மேற்கொள்கிறது.
கரன்சி நோட்டுகளில் பிரிட்டன் அரசர் புகைப்படம் நீக்கம் – அரசு முடிவு!
உய்குர் மக்கள் அதிகம் வசிக்கும் துருக்கி, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெய்ஜிங் இராஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகித்து, உய்குர்களைத் தடுத்துவைத்து நாடுகடத்துவதற்காக, உலகில் அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமில்லாமல் போய்விட்டது என்று சர்வதேச ஊடகமான தி ஜெனிவா டெய்லி தெரிவித்துள்ளது.