அமெரிக்காவைவிடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. மேலும் சீனா – அமெரிக்கா இடையே சர்வதேச அரங்கில் வர்த்தக போட்டி வலுவாக மாறி உள்ளது. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அவ்வப்போது எடுத்து வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் சீனாவை உளவு பார்க்கை அமெரிக்கா பலூன் வடிவில் நுண்ணறிவு கருவிகளை அனுப்பியது. அது குறித்து சீனா கடும் கண்டனங்களை தெரிவித்தது. இந்தநிலையில் அமெரிக்காவின் நடவடிக்களுக்கு எதிர் வினையாக சீனாவும் 2 பலூன்களை அமெரிக்காவிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மேலே சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அந்த பலூன் நிச்சயம் ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் மக்களின் நலன் கருதி இந்த உளவு பலூனை சுடவில்லை என்றும் அமெரிக்கா கூறியது. பலூன் விவகாரத்தால் அமெரிக்கா – சீனா இடையே விரோதப் போக்கு மேலும் அதிகரித்து வந்தது. 2வது பலூன் குறித்த தகவல் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு தெரிவிக்கப்பட்டது. இவை சீனாவிலிருந்து ஊடுறுவிய உளவு பலூன்கள் என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இவை சாதாரண வானியல் மாற்றங்கள் தொடர்பாக ஆராய அனுப்பப்பட்ட பலூன்கள் என்று சீனா சொல்கிறது.
ஆனால் சீனாவால் அனுப்பப்பட்ட பலூன்களில் சென்சார்கள், கேமரா உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. பலூனின் செயல்பாடுகள் சோலார் பேனல்கள் மூலம் சூரிய ஒளி ஆற்றலை பெற்று ஹீலியம் வாயு உதவியுடன் இயங்கி வந்தது தெரியவந்தது. அதுவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் என்று சொல்லப்படும் பென்டகன் அருகே பறந்து சென்றுள்ளது.
முதலில் இந்த பலூனை சுட்டு வீழ்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ராணுவம் சம்மதம் தெரிவிக்கவில்லை. காரணம், அந்த பலூனின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அதிலிரு்நது வரும் பொருட்களால் ஏதாவது பிரச்சினை வருமா என்ற சந்தேகத்தை ராணுவம் எழுப்பியது. அதைத் தொடர்ந்து பலூன்கள் சுட்டுத்தள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமரெிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் சீனப் பயணம் ஒத்தி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பலூன் உளவு பார்க்கும் பலூன் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதுதொடர்பாக ஆராயப்படும். எனது சீனப் பயணத்தை தள்ளி வைத்துள்ளேன் என்றார்.
தைப்பூசத் திருவிழா – ஓபிஎஸ் சாமி தரிசனம்!
இந்தநிலையில் பலூன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ‘‘அமெரிக்கா பலூன்களை வெடிக்கச் செய்ததுள்ளது. அது ஒரு சிவிலியன் பலூன் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இது நடந்துள்ளது. அமெரிக்கா சர்வதேச நடைமுறையை தீவிரமாக மீறுகிறது.
மியான்மரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்; ராணுவ அரசு அறிவிப்பு.!
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வலுவான அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இந்த நடவடிக்கையை சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், எங்கள் இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலுக்கு பதிலளிக்கும் வகையில் வந்தது என்று கூறினார்.