சென்னை: சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 50 இடங்களில் 200 ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்த சென்னை காவல்துறை திட்டம் வகுத்துள்ளது. திருட்டு வாகனத்தின் எண் கேமராவில் பதிவானதும் போலீசுக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.