திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன். இவர் மகன் யோகேஸ்வரன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார்.இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று யோகேஸ்வரன் திருமண பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை செய்வதற்காக வெள்ளகோவிலில் உள்ள அத்தை வீட்டிற்கு உறவினர்கள் ஆறு பேருடன் ஆம்னி வேனில் சென்றுள்ளார்.
அதன் படி, அவர்கள் வெள்ளகோவிலுக்கு சென்று திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த ஆம்னி வேனை யோகேஸ்வரன் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் ஓலப்பாளையம் அருகே செல்லும் போது எதிரே வந்த அரசு பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த நான்கு பேரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.