திருமண ஆடை வடிவிலான கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
திருமண ஆடை வடிவில் கேக்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியில் ஸ்வீட்டிகேக்ஸ் என்ற பேக்கிரியை நடாஷா கோய்ன்(Natasha Coline) என்ற பெண் நடத்தி வருகிறார், புதுமையான பல வடிவங்களில் கேக்குகளை வடிவமைப்பதில் இவர் அந்த பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறந்து விளங்கி வருகிறார்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் உலக திருமண கண்காட்சியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியின் இறுதி சுற்றில், நடாஷா கோய்ன் மனிதர்கள் அணியக்கூடிய சுமார் 131.15kg எடையுள்ள https://news.lankasri.com/article/indonesia-girl-marries-tamilnadu-relatives-1674795137திருமண ஆடை வடிவிலான கேக் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
பல அடுக்குகளாக வடிவமைப்பட்டு இருந்த கேக்கினால் செய்யப்பட்ட ஆடை, பாரம்பரிய திருமண உடை மரபுகளால் நிறைந்து காணப்பட்டது, அத்துடன் இதில் ராயல் ஐசிங் மற்றும் ஸ்வீட் ஹார்ட் நெக்லைன் ஆகியவற்றால் செய்யப்பட்ட பூக்கள் நிறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை
இதையடுத்து அவருக்கு உலகின் மிகப்பெரிய அணியக்கூடிய கேக்-கை தயாரித்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது, இது தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அவர்களது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில், அவற்றை கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.
இந்த பதிவிற்கு கமெண்ட் செய்து இருந்த சமூக ஊடக பயனர் ஒருவர், கேக் எங்கே..? அவள் அணிந்திருக்கிறாள் என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.