நாட்டின் இளம் தலைமுறையினரால் முடியாதது ஏதுமில்லை என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அத்தொகுதி எம்பி ராஜ்யவர்தன் சிங் ரதோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகாகேல் விளையாட்டு விழாவில், 6 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு மும்மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விளையாட்டு விழாக்கள் நடைபெற தொடங்கியுள்ளதாகவும், அவை விளையாட்டுத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.