தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, ஒரு இருசக்கர வாகன ஷோருமில், மதுபோதையில் மயங்கிக்கிடந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணிணி ஆப்பரேட்டராக பணியாற்றும் அந்த பெண்ணை, அவரது கணவர் இசக்கி அலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் வாய் குளறி பேசியுள்ளார்.
சந்தேகமடைந்த இசக்கி, ஷோரூம் சென்று பார்த்தபோது, அவரது மனைவி தரையில் மயங்கிக்கிடந்துள்ளார்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அந்த பெண் தன்னுடன் பணியாற்றும் தங்கராஜ் என்பவர் கொடுத்த குளிர்பானத்தை அருந்தியபின் மயக்கமடைந்ததாக கூறியுள்ளார்.
தங்கராஜிடம் போலீசார் விசாரித்தபோது, அந்த பெண் மது வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டதாலேயே மது வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்