நெல்லை மாவட்டத்தில், மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த தனது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, கணவர் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
கூடங்குளத்தைச் சேர்ந்த செந்தில், எகிப்தில் கட்டுமானப்பணிகளில் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் வரை சம்பாதித்தாக கூறப்படுகிறது.
அவரது மனைவிக்கும், நண்பர் கிருபாகரனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டதால் 8 மாதங்களுக்கு முன் வேலையை விட்டுவிட்டு செந்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, மனைவி தனியாக வசித்துவந்த நிலையில், கிருபாகரன் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்த செந்தில், அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
காயமடைந்த கிருபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் செந்திலை தேடிவந்த நிலையில், தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது.