தற்போது கண்டிப்பாக ஒரு வெற்றி அவசியம் என்ற கட்டாயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரின் சமீபத்திய திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.
இதன் காரணமாக ரஜினியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனவே அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் பதிலடி கொடுக்க ரஜினி காத்துக்கொண்டிருக்கிறார்.
AK62: AK62 பஞ்சாயத்து…வசமாக சிக்கிக்கொண்ட அஜித்..கொஞ்சம் கஷ்டம் தான் போலயே..!
நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அம்மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதால் ஜெயிலர் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து தற்போது ஜெயிலர் திரைப்படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என பரவலாக ஒரு செய்தி வலம் வருகின்றது. ஏனென்றால் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த அஜித்தின் AK62 தள்ளிப்போவதாக தெரிகின்றது. அப்படத்திலிருந்து விக்னேஷ் திவான் நீக்கப்பட்டதால் தற்போது AK62 படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகின்றது.
எனவே AK62 தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கமலின் இந்தியன் 2 வெளியாகவுள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இதன் மூலம் ரஜினி மற்றும் கமலின் படங்கள் 18 ஆண்டுகளுக்கு பிறகு மோதவுள்ளது.
கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினியின் சந்திரமுகி மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே தினத்தில் வெளியாகின. அதன் பிறகு தற்போது மீண்டும்
கமல்
மற்றும் ரஜினியின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.