புகழ்பெற்ற பாடகியான வாணி ஜெயராம் நேற்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார் வாணி ஜெயராம்.
இதையடுத்து 78 வயதான வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வாணி ஜெயராம் ரத்த காயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார் இவரின் இறப்பு இயற்கைக்கு மாறானது என கருதி விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
AK62: AK62 பஞ்சாயத்து…வசமாக சிக்கிக்கொண்ட அஜித்..கொஞ்சம் கஷ்டம் தான் போலயே..!
இதைத்தொடர்ந்து வாணி ஜெயராமின் இறப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாணி ஜெயராமின் உடல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தற்போது அவரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகிவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்படி வாணி ஜெயராம் தலையில் அடிபட்ட காயத்தால் தான் இறந்ததாக தகவல் வந்துள்ளது. அவரது படுக்கை அறையில் இருந்த மேஜையில் அடிபட்டு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக தான் வாணி ஜெயராம் இறந்துள்ளார் என தெரிகின்றது. மேலும் வாணி ஜெயராமின் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்பது சிசி டிவியில் பார்த்தபோது தெரியவந்ததாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து வாணி ஜெயராமின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.