ரோம்:ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படும் போப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ், ஆறு நாள் நல்லிணக்கப் பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ சென்றுவிட்டு, ரோம் நகருக்கு தனி விமானத்தில் திரும்பினார்; அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
போர்ச்சுக்கல் தலைநகரான லிஸ்பன் நகரில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக இளைஞர் தின கொண்டாட்டத்திலும், செப்., ௨௩ல் பிரான்சில் உள்ள மார்செய்ல் நகரில் நடைபெறும் மத்திய தரைக்கடல் பிஷப் மாநாட்டிலும் பங்கேற்கிறேன்.
கடந்த 2017ல் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணம் கைவிடப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement