அதிகளவில் வெளியேறும் அன்னிய முதலீடுகள்| High outflow of foreign investments

புதுடில்லி:கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரியில், அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், பங்குச் சந்தைகளிலிருந்து 28 ஆயிரத்து, 852 கோடி ரூபாயை, வெளியே எடுத்துள்ளனர்.

அண்மைக் காலமாக, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துவந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜனவரியில், சீன சந்தைகள் அதிக ஈர்ப்புள்ளதாக மாறியதை அடுத்து, முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்துள்ளனர்.

முந்தைய மாதமான டிசம்பரில் 11 ஆயிரத்து, 119 கோடி ரூபாயையும்; நவம்பரில் 36 ஆயிரத்து, 238 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருந்த நிலையில், ஜனவரியில் வெளியே

எடுத்துள்ளனர்.இந்திய சந்தைகள், உலக சந்தைகளைவிட குறைவான செயல்திறனைக் காண்பதால், வரும் மாதங்களில் அன்னிய முதலீடுகள் அதிக ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம் என நிபுணர்கள்
கருதுகின்றனர்.இந்திய சந்தைகளிலிருந்து பங்குகளை விற்று சீனா, ஹாங்காங், தென்கொரியா ஆகிய சந்தைகளில் குறைவான விலையில் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.