அமைச்சர்கள் கூட்டத்தில் மின்சார திருட்டு: அமமுக வேட்பாளர் குற்றச்சாட்டு!

வாக்கு சேகரிப்புக்காக செல்லும் அமைச்சர்கள் போக்கஸ் லைட்டுக்காக மின்சாரம் நேரடியாக எடுக்கப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவப்பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவப்பிரசாந்த் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம், கிருஷ்ணா தியேட்டர், காமராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் கூறுகையில், திமுக அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அவர்களுக்கான போக்கஸ் லைட்டுக்கு மின்சாரம் நேரடியாக எடுக்கப்படுவதாகவும், அமைச்சர்கள் செல்லும் சாலைகள் மட்டும் செப்பனிடப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மற்ற பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. அதனை திமுகவினர் புறக்கணிக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவுமே செய்யவுமில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறப்பான முறையில் வெற்றி பெறும். மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். மாற்றம் கொண்டுவர எங்களால் மட்டுமே முடியும். திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட வளர்ச்சிகள் இல்லாததால் மக்கள் அதை எதிர்க்கின்றனர். அதனால்தான் ஒரு மாற்றத்தை பொதுமக்கள் விரும்புவதோடு தற்பொழுது தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.