இறையன்பு போட்ட உத்தரவு… துறை மாறும் ஆர்.கண்ணன் ஐஏஎஸ்- என்ன காரணம்?

தமிழ்நாடு அரசு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து தொடர்ச்சியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் இன்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஆர்.கண்ணன் ஐஏஎஸ் இடமாற்றம்

அதில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த ஆர்.கண்ணன் ஐஏஎஸ் அவர்கள் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் அந்த துறை செயலாளராக இருக்கும் ரவிக்குமார் ஐஏஎஸ் விடுமுறையில் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவராக, பல்வேறு துறைகளின் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

யார் இந்த ஆர்.கண்ணன்?

இவர் 2015ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். வருவாய்த் துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சுனாமி ஏற்பட்ட போது நிவாரணப் பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டவர். TNCSC ஆணையராக, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். 2015ஆம் ஆண்டு கஜா புயல் ஏற்பட்ட போது சென்னை உள்ளிட்ட மத்திய மண்டலங்களில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டார்.

நிர்வாக மாற்றங்கள்

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை முக்கிய துறைகளில் பணியில் அமர்த்தினர். அதன்படி ஆர்.கண்ணன் ஐஏஎஸ் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று அதிகாரிகள் இடமாற்றம்

முன்னதாக கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதாவது, எஸ்.வளர்மதி ஐஏஎஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக, டி.பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக, அமர் குஷுவ்ஹா ஐஏஎஸ் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேர்தல் கணக்கு

அதிகாரிகள் இடமாற்றத்தை பொறுத்தவரை வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால் அதிகாரம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கைகளுக்கு சென்றுவிடும். அப்போது, 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துவிடுவர்.

அரசியல் அழுத்தம்

இந்த நடவடிக்கை அவசர கதியில் வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடும். எனவே முன்கூட்டியே பொறுப்பை உணர்ந்து செயல்படும் வகையில் பணியிடமாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி சில அரசியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாகவும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.