'என்ன சிம்ரன் இதெல்லாம்'.. சரக்கு பாட்டிலுடன் சிக்கிய ராமதாஸ் புகைப்படம்..?

பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என பல ஆண்டுகளாக எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் வலியுறுத்தி வருகிறது. இந்த புத்தாண்டில்கூட பாமக நிறுவனர் ராமதாஸ் அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல…. நாளை அல்ல…. இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையாகியுள்ளது.

ஒரு அறையில் அமர்ந்திருக்கும் ராமதாஸின் அருகே உள்ள டேபிளுக்கு கீழ் பாட்டில் ஒன்று உள்ளது. பெரும்பாலான ஒயின் பாட்டில் வடிவிலேயே அந்த பாட்டில் இருப்பதால் அதனை மது என்று சிலர் குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

அதற்கு ஏதிவினைற்றி வரும் பாமக ஆதரவாளர்கள், ராமதாஸை சிறுமை படுத்திட வேண்டும் என்று எண்ணியே ஆலிவ் ஆயில் பாட்டிலை மது பாட்டில் என்று சமுக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதான் அந்த பாட்டில் என்று குளோசப் போட்டோவையும் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.