ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஆரோன் பின்ச்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

2011-ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் களமிறங்கியவர் ஆரோன் பின்ச். 36 வயதான இவர், அதிரடி தொடக்க ஆட்டத்தால் அணியின் அசைக்க முடியாத வீரராக உருவெடுத்தார். மற்றொரு அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னருடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு பல வரலாற்று வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.

2014-ம் ஆண்டே ஆரோன் பின்ச்சுக்கு ஆஸ்திரேலிய டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டு கழித்து ஸ்டீவ் ஸ்மித்திடம் அந்த பதவி சென்றது. 2018-ல் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்டீவ் ஸ்மித் சிக்கியதைத் தொடர்ந்து மீண்டும், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டார்.

இவர் தலைமையில் 2019-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வரை முன்னேறிய நிலையில், 2021-ல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ஆரோன் பின்ச் பெற்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி நாக் அவுட் போட்டிக்கு கூட முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. ஆரோன் பின்சுக்கும் சமீப காலமாக நல்ல பார்மில் இல்லை. எனவே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த ஆரோன் பின்ச், 2024 டி20 உலகக் கோப்பை வரை நான் விளையாடுவேன் என நினைக்கவில்லை. எனவே, அணியின் எதிர்காலம் கருதி தற்போதே ஓய்வை அறிவிக்கிறேன். 12 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதை பெரும் கவுரமாக கருதுகிறேன். பல தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடும் மகத்தான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

2015 ஒருநாள் உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை வென்றதே எனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சபட்ச தருணங்கள் என தெரிவித்துள்ளார். ஆரோன் பின்ச் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள், 146 ஒருநாள் போட்டிகள், 103 டி20 போட்டிகளை விளையாடியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஆரோன் பின்ச் கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.