கர்நாடக விடுதியில் விபரீதம்; 137 மாணவர்களுக்கு சிகிச்சை!

கர்நாடக மாநிலம், மங்களூரு பகுதியில், சக்தி நகர் என்ற இடத்தில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் படிக்கும் கல்லூரி மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதியில் திங்கள் அன்று இரவு உணவு சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் போன்றவற்றால் அவதிப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவு உண்ட பிறகு அனைவருக்கும் ஒரே நேரத்தில் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே செவ்வாய் கிழமை அன்று போலீசார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். விடுதியில் உணவின் தரம் சரியில்லாமல் இருந்தததே மாணவர்களின் உடல் உபாதைக்கு காரணம் எனவும், இது குறித்து மேலும் விசாரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் கமிஷனர் சஷி குமார்; உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நகரம் முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக கூறினார். முதலில் மாணவர்களை சிட்டி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அதன் பிறகு 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் வெவ்வேறு இடங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உணவை உண்ட பிறகு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு திங்கள் கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உணர்விற்கு பயன்படுத்திய நீரில் பிரச்னை இருப்பதும் தெரியவந்துள்ளதாக கமிஷனர் குறிப்பிட்டார்.

அதானி விவகாரம்; நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி கேட்ட ராகுல் காந்தி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஆக்கிரமித்து உள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியுள்ளதால், பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. விடுதி மாணவர்களும் அங்கு கூடி இருக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட சில மாணவர்களின் நிலை மோசமாக உள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்தார்.

அதிகாலை 2 மணியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், 137 க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள், ஏஜே மருத்துவமனை, முல்லர் மருத்துவமனை, கேஎம்சி மருத்துவமனை, யூனிட்டி, விட்டி மற்றும் மங்களா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து பேசிய மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பாளர்; மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் வாந்தி, மயக்கத்தால் அனைவரும் பயத்தில் உள்ளனர். ஆபத்தான நிலையை மாணவர்கள் கடந்து விட்டனர். எனவே யாரும் பயப்பட தேவை இல்லை. இந்த சம்பவம் குறித்து விடுதி காண்காணிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று உரிய விசாரணை செய்யப்படும். இதற்கான காரணமும் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.