‘டாமிக்கு’ ஆதார் இருக்கு.. சாதிச்சான்றிதழ் கொடுங்க- பீகாரில் ஷாக்!

இந்தியாவை பொறுத்தவரை ஆதார் அட்டை என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரை ஆதார் என்பது இங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதற்கும், வேறு ஏதேனும் சேவைகளுக்கு பதிவு செய்வதற்கும் ஆதார் என்பது கேட்கப்பட்டு வருகிறது.

அது மட்டும் இல்லாமல், பான் கார்டு, தொலைபேசி எண், ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளுடனும் ஆதார் இணைப்பு என்பது அவசியமாகிறது. தற்போது EB எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசும் கூறி இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை வைத்து பல சேவைகளை பெற்று வரும் நிலையில், பீகார் மாநிலத்தின் கயா பகுதியில் ஒரு வினோதமான செயல் நடந்து உள்ளது. பீகார் மாநில அரசு ஜனவரி 7 முதல் ஜனவரி 21 வரை மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுக்கும் பணியை நடந்து வந்தது. அந்த சமயத்தில் பீகாரில் இருக்கும் பல மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு தங்களது விவரங்களை சமர்ப்பித்து இருந்தனர்.

பீகாரில் உள்ள குராறு மண்டல அலுவலகத்திற்கு நாய் ஒன்றிற்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. வேண்டும் என்றே அதிகாரிகளை ஏமாற்ற யாரோ இவ்வாறு செய்கின்றனர் என முதலில் நினைத்து இருந்தனர். பின்பு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த படிவத்துடன் அந்த நாயின் ஆதார் அட்டை நகலும் இணைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்ட அலுவலக அதிகாரிகள் மட்டும் இன்றி, மொத்த அலுவலகமும் ஆடிப்போய் பார்த்துள்ளது.

Turkey Earthquake: முன்பே உணர்த்திய பறவைகள்; 2வது நாளாக நிலநடுக்கம்!

வெறுமனே ஆதார் அட்டை என சமர்ப்பிக்காமல், உண்மையான ஆதார் அட்டையில் இருக்கும் அனைத்து விவரங்களும் இந்த நாய்க்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையிலும் இடம்பெற்று உள்ளது. அந்த வகையில், நாயின் பெயர் ‘ டாமி ’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாயின் தொழில் இடத்தில மாணவர் என குறிப்பிட்டு உள்ளனர். நாயின் பிறந்த தினமாக ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 2022 வருடம் என அந்த ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ளது. டாமியின் பெற்றோர்களாக ஷெரு மற்றும் ஜின்னி எனவும், இது மனிதனின் அடையாள என இருக்கும் இடத்தில இது ஒரு நாயின் அடையாளம் எனவும் அந்த ஆதார் அட்டையின் நகலில் அச்சடிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆதார் அட்டையில் டாமியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைக்கப்பட்டு, QR கோடு ஸ்கேன் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் விண்ணப்பத்தில் உள்ள போன் நம்பரை ஆராய்ந்த போது ‘ராஜா பாபு’ என்பவரின் பெயர் என கண்டறியப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.