தகுந்த பதிலடிக்கு தயார் ராணுவ உயரதிகாரி பேச்சு| Ready for appropriate response, high-ranking military officers speech

ஸ்ரீநகர் ”எல்லையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், நம் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எதிரிகள் அத்து மீற முயன்றால் தகுந்த பதிலடி தருவோம்,” என, ராணுவத்தின் வடக்கு மண்டலத்தின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர திவேதி உறுதியுடன் தெரிவித்தார்.

நம் ராணுவத்தின் வடக்கு மண்டலம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி, ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாவது:

நம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் திடமாக உள்ளது.

எல்லையில் தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்க முயன்றால், நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும். இது சமீப காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து, ஒவ்வொரு நாடும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

நம் நாட்டின் எல்லையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, துாதரக அதிகாரிகள் வாயிலாகவும், ராணுவ அதிகாரிகள் வாயிலாகவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

நம் எல்லையை பாதுகாப்பதில் முப்படைகளும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. எந்த சூழ்நிலையையும், சவாலையும் சந்திக்கும் வகையில் நம் படைகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.