உதய்பூர், ராஜஸ்தானில் பஜ்ரங்தள பிரமுகரை, இரண்டு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு உதய்பூர் நகரில் ஹிந்து அமைப்பான பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த ராஜு டெலி, 38, என்பவர் கடை வைத்திருந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு தன் கடைக்கு வெளியே வந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜுவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜுவை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement