“பட்ஜெட்டை மக்களிடம் கொண்டு போங்க”- எம்பிகளுக்கு பிரதமர் அறிவுரை!

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டிற்கு பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை ஆற்றியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்றாலும், இந்த பட்ஜெட்டை யாரும் தேர்தலின் தாக்கம் கொண்ட பட்ஜெட் என அழைக்கவில்லை என பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் மோடி உரையை மேற்கோள் காட்டி பேசிய மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, 2023 தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு என்ன வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் அவர்களது தொகுதி வாரியாக குறிப்பிட வேண்டும் என எம்பிகளுக்கு மோடி அறிவுறுத்தினார்.

இது குறித்த உரையாடல் அனைத்து பிரிவு மக்களிடையே நடத்தப்பட்டு, பட்ஜெட்டில் மக்களுக்கு நாம் வழங்கிய நல்ல விஷயங்கள் குறித்து எடுத்து உரைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார். மக்களுக்கு பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டியது எம்பிக்களின் கடமை, அதை கட்டாயம் செய்ய வேண்டும். இந்த பட்ஜெட் எல்லா தரப்பு மக்களுக்கும் உகந்தது என்பதை எடுத்துரைக்க வேண்டும், வருமான வரி வரம்பு உள்ளிட்ட பல திட்டங்களை நடுத்தர மக்களுக்காக செய்தது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டதாக தெரிகிறது.

‘டாமிக்கு’ ஆதார் இருக்கு.. சாதிச்சான்றிதழ் கொடுங்க- பீகாரில் ஷாக்!

எப்போது நாம் பபட்ஜெட் தாக்கல் செய்தாலும் அதனை ஒரு தரப்பு கட்டாயம் எதிர்த்து வருவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த முறை நாம் தாக்கல் செய்த பட்ஜெட்டை பாஜகவின் சித்தாந்தம் பிடிக்காதவர்கள் கூட எதிர்க்காமல் வரவேற்கின்றனர் என பிரதமர் மோடி குறிப்பிடத்தாக பிரகாலத் ஜோஷி குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், நகரங்களில் இருந்து வரக்கூடிய எம்பிகளிடம், ஸ்போர்ட்ஸ் மீட்டிங்கை ஏற்பாடு செய்யுமாறு மோடி அறிவுறுத்தி உள்ளார். இன்றைய கால கட்டத்தில் அதிக இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதில்லை என்ற பார்வை இருக்கிறது. இதனை சரிசெய்ய இந்த மீட்டிங் உதவும் என்பதே நோக்கம்.

G20 மாநாடு போன்ற பல்வேறு விஷயங்களுக்காக இந்தியா வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள், நாம் செய்த ஏற்பாட்டினை வெகுவாக பாராட்டுவதாகவும் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு உதவும் வகையில் இந்தியா அணைத்து உதவிகளையும் செய்யும். இந்தியாவில் இருந்து மீட்புக்குழுக்கள் மற்றும் மருத்துவ உதவி துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மோடி கூறி உள்ளார். 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற நிலநடுக்கத்தை மோடி நினைவு கூர்ந்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.