புதுடெல்லி: மக்களைவையில் தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியதில்,”பணியாளர் தேர்வு ஆணையத்தின் 2021-22ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே தமிழர்கள் என தெளிவாக புள்ளிவிரம் குறிப்பிடுகிறது. இதேபோல், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த ஆண்டு தென்மண்டலத்தில் நடத்திய தேர்வுகளில், தேர்வானவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது. இது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் தமிழ் மொழியில் தேர்வுகளை நடத்துவது, தமிழகத்தில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே நிறுவனங்களில் ‘ஆக்ட் அப்ரண்டிஸ்’ உள்ளிட்ட இடங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.