Food Poisoning: ஹாஸ்டல் மெஸ் உணவில் விபரீதம்! 137 மாணவர்கள் மருத்துவமனையில்!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மங்களூருவின் சக்திநகர் பகுதியில் ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட 137 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவின் சக்திநகர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குப் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது ஹாஸ்டலில் உணவு தரம் சரியில்லை என்பதே காரணம் என்று தெரியவந்துள்ளது..

நேற்று மதியம் மாணவர்கள், வழக்கம் போல தங்கள் ஹோஸ்டலில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு, பலருக்கும் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிகாலை 2 மணி அளவில் வரிசையாகப் பல மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து பலருக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் நிலைமையின் விபரீதம் புரிந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்ட பிறகே பாதிப்பின் அளவு தெரியவந்துள்ளது. அதன்பிறகுக் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சிட்டி மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையில், அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் கல்வி நிறுவனம் இறங்கியுள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஏஜே மருத்துவமனையில் 52 மாணவர்களும், முல்லர் மருத்துவமனையில் 42 பேரும், கேஎம்சியில் 18 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யூனிட்டி மருத்துவமனையில் 14 பேரும், சிட்டி மருத்துவமனையில் 8 பேரும், மங்களா மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க மருத்துவமனைகளில் குவிந்து வரும் நிலையில், விஷயம் விபரீதமாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.