திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85%க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது கலைஞர் இட்ட ஒரு கையெழுத்தால் லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்து மாறியது. இந்தியாவில் கலைஞர் ஆட்சியில் தான் சொத்துரிமை மீட்கப்பட்டது. பணியிடங்களில் 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்,’என்றார்.