ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் மனு நிராகரிக்கப்பட்டது.