ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 24ந்தேதி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி […]