புதுடில்லி : காதலியைக் கொன்று, துண்டு துண்டாக்கி வீசி எறிந்த வழக்கில், 6,600 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை புதுடில்லி போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த அப்தாப் பூனவாலா, ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதற்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் மகளுடன் தொடர்பு கொள்ள முடியாததால் ஷ்ரத்தாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்தாப் கடந்தாண்டு மே ௧௮ம் தேதியே ஷ்ரத்தாவைக் கொலை செய்து, அவருடைய உடலை, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், அப்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம், கடந்தாண்டு இறுதியில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கில் புதுடில்லி போலீசார், 6,600 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் கூறப்பட்டுள்ளதாவது:
குடும்ப செலவு, அப்தாபுக்கு புதுடில்லியில் இருந்து துபாய் வரை உள்ள பெண் நண்பர்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே பலமுறை சண்டை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், ஆத்திரத்தில் ஷ்ரத்தாவை கொலை செய்ததாக அப்தாப் விசாரணையில் தெரிவித்துஉள்ளார். முதலில் ஷ்ரத்தாவின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி எறிய திட்டமிட்டிருந்தார். ஆனால், போலீசில் சிக்கிவோம் என்ற பயத்தில், அந்த திட்டத்தை கைவிட்டார்.
பிறகு, ரம்பம், சுத்தியல், கத்தி உள்ளிட்டவற்றை வாங்கி, ஷ்ரத்தாவின் உடலை, ௩௫ துண்டுகளாக்கியுள்ளார். இதைத் தவிர, அவருடைய எலும்புகளை, ‘கிரைண்டரில்’ போட்டு தூளாக்கியுள்ளார்.
ஒவ்வொரு உடல் பாகங்களாக அவர் புதுடில்லியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இதுவரை, 20 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தலை உட்பட மற்ற பாகங்கள் கிடைக்கவில்லை.
ஷ்ரத்தாவின் தலையைத்தான் அவர் கடைசியாக தூக்கி வீசியுள்ளார். ஷ்ரத்தாவின் செல்போனை தன்னிடமே அப்தாப் வைத் திருந்தார். அதை மும்பையில் அவர் வீசியுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்