அமெரிக்காவின் வான் பகுதியில் சீன பலூன் ஒன்று பறந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது வானிலையை ஆய்வு செய்ய பறக்க விடப்பட்டது என்றும், அதிக காற்றின் காரணமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா விளக்கம் அளித்தது. ஆனால் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அருகிலேயே பலூன் பறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
பலூனில் இருக்கும் அம்சங்கள்
அதுமட்டுமின்றி பலூனில் சென்சார், கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலூனாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. சுமார் 55 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த பலூனால் பரபரப்பு உண்டானது. இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா? என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.
கண்ணில் விரலை விட்ட சீனா; சுட்டு தள்ளி உளவு பலூனை பஸ்பமாக்கிய அமெரிக்கா!
அமெரிக்கா அதிரடி முடிவு
தொடர்ந்து இரண்டாவது பலூனும் தென்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்த முடிவு செய்தது. இதுபற்றி சீன பாதுகாப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வானிலையை கணிக்க அனுப்பப்பட்ட பலூன் என்றும், உளவு பார்க்க வரவில்லை என்றும் மீண்டும் மீண்டும் விளக்கம் கொடுத்தனர்.
சீனா கடும் கோபம்
ஆனால் அமெரிக்கா அதனை ஏற்காமல் சுட்டு வீழ்த்தியது. இது கடலில் விழுந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரிதும் வைரலானது. இந்த சம்பவம் சீன தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. உடனே அந்த பலூனை மீட்க கடற்படையை அமெரிக்கா அனுப்பியது. பலூனில் அப்படி என்ன தான் விஷயங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க அரசு தீவிரம் காட்டியது.
கடலில் இருந்து மீட்பு
இந்நிலையில் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் தெற்கு கரோலினா கடற்பகுதியில் சீன பலூன் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களை அமெரிக்க கடற்படை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து பலூனில் உளவு பார்க்கும் கருவிகள் ஏதேனும் இருக்கின்றனவா? இல்லையா?
அமெரிக்காவைத் தொடர்ந்து.. கொலம்பியாவிலும் மர்ம பலூன்.. சீனா அனுப்பியதா?
சிறப்பு கப்பல்கள் ஈடுபாடு
என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. சீன பலூன் 200 அடி உயரம் கொண்டதாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பலூனின் பாகங்கள் 11 கிலோமீட்டர் சுற்றளவில் சிதறி கிடைந்துள்ளன. இவற்றில் ஒன்று விடாமல் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான கிரேன் பொருத்தப்பட்ட கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மேலும் நீருக்கு அடியில் பயணிக்கக் கூடிய ஆளில்லா இயந்திரத்தை அனுப்பி பலூனின் பாகங்களை சேகரித்துள்ளனர். இந்த பலூனை ஆய்வு செய்வதன் மூலம் வானில் இருந்த படியே கண்காணிக்கும் சீனாவின் தொழில்நுட்ப வசதிகள், அதன் வடிவமைப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்கா தரப்பு கருதுகிறது.