திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம் – செங்கோட்டையன்..!!

அ.தி.மு.க. வேட்பாளர் கே. எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து நேற்று முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அதிமுகவினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் நேற்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பிரசாரத்தில் கூட்டணி கட்சியான தமாகாவைச் நிர்வாகிகள் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

நாளை (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.