லக்னோ: உத்தர பிரதேச தெருக்களில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தினந்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை உணர்ந்து உத்தர பிரதேச அரசு முதல் முறை முன்னோடித் திட்டமாக பசுக்கள் சரணாலயத்தை விரைவில் தொடங்க உள்ளது.
புர்காசி நகரில் தொடங்க வுள்ள இந்த சரணாலய திட்டத்துக்காக 52 ஹெக்டேர் நிலத்தைஉ.பி. அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.63 கோடியை ஒதுக்கியுள்ளது. 5,000 கால்நடைகள் தங்கும் அளவிலான சரணாலய கட்டுமானப் பணிகளுக்கு விரைவில்டெண்டர் அறிவிப்பு வெளியிடப் படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.